HOME | கவிதைகள் | பொன்மொழி | பொது அறிவு | நகைச்சுவை

தமிழ் கடல் . . .


          பொன்மொழி

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி், போராடும் வரை மனிதன். நீ மனிதன்.

மயிரைக் கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்

மாமி்யார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடம்

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு

நிறை குடம் நீர் தளும்பாது. குரை குடம் கூத்தாடும்

தனி மரம் தோப்பு ஆகாது

முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

ஆழம் பார்க்காமல் காலை விடாதே

 யானைக்கும் அடி சறுக்கும்

 எறும்பு ஊரக் கல்லும் தேயும்

 காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு

 ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

 இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் (திருக்குறள்)

 நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்

 கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

 மூர்த்தி சின்னதானாலும் கீர்த்தி பெரியது

 புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

சிறு நுணலும் தன் வாயால் கெடும்

கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு (ஔவையார்)

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு (திருக்குறள்)

பாம்பின் கால் பாம்பறியு

தோல்வி உன்னைத் தோற்க்கடிக்கும் முன் தோல்வியை நீ தோற்க்கடித்து விடு (விவேகானன்தர்)

மி்ன்னுவதெல்லாம் பொன்னல்ல

வெறும் கை என்பது மூடத்தனம் உன் விரல்கள் பத்தும் மூலதனம்

வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப்பார்.முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

 தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம், அது பனிக்கட்டி ஆகும் வரை பொருத்தால்.

ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்

அடி மேல் அடி வைத்தால் அம்மி்யும் நகரும்

தீதும் நன்றும் பிறர் தர வாரா

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

பொறுத்தார் பூமி் ஆள்வார்

சாதி இரண்டொழிய வேறில்லை.

ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை

குப்புர விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.

ஆக்கப்பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்கவில்லை

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்

 நாய் வாலை நிமிர்த்த முடியாது

 நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் ஆகவேண்டும்

ஆறெல்லாம் பாலாய்ப்போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்

நாய் விற்ற காசு குரைக்காது

மலையைக் கெல்லி எலியைப் பிடித்தானாம்

சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம்

விதியை மதியால் வெல்லலாம்

*நாம் பெரும்பாலான மனிதரை வெறுப்பதற்கு முக்கியமான காரணம் அவர்களிடம் இருக்கும் கெட்ட குணங்கள் அல்ல. நம்மிடம் உள்ள கெட்ட குணங்கள்தான்.

*
கோழையும் வீரனாவான் தன் உரிமைகள் பறி போகும்போது.

*
என்னால் எதையுமே செய்யமுடியுமென்று தன்மீது தளராத நம்பிக்கை கொண்டு எவன் கடுமையாக உழைக்கின்றானோ அவனுக்கு எப்போதும் வெற்றி கிடைக்கும்.

*
துன்பங்கள் நிரந்தரமானவை அல்ல, அவை எப்போதும் பாலத்தின் அடியில் ஓடுகின்ற தண்ணீரைப்போல் ஓடிவிடும்.

*
எந்த இடையுறு இன்னல்களையும் அனுபத்தில் இன்பமாக கருதுகிறவன் எவனோ, அவன் வரும் எதிர்கால உலகில் கோடானுகோடி இன்னல்களைத் தீர்க்கக் கூடிய வன்மை உடையவனாக பிரகாசிப்பான்.

*
ஓன்றின் தோல்வி மற்றொன்றின் வெற்றி, ஒன்றின் அழிவு மற்றொன்றின் ஆக்கம், ஒன்றின் ஒடுக்கம் மற்றொன்றின் தோற்றம். இந்த அழிவு ஆக்கங்களிலிருந்தே மனிதனுடைய எண்ணம், சக்தி, செயல் எல்லாம் வளர்ச்சியடைந்து வருகின்றன.

*
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.